நாடு முழுவதும் இன்று தொடக்கம் மின்வெட்டு..! நடைமுறை இன்று பிற்பகல் அறிவிக்கப்படும்..
நாட்டிலுள்ள நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் இயங்குவதற்கான மூலவளம் பற்றாக்குறையினால் இன்று தொடக்கம் நாளாந்த மின் துண்டிப்பு இடம்பெறக் கூடுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய நடைமுறைகளை இன்று பிற்பகல் மக்களுக்கு அறிவிக்கப்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, மக்கள் நெருக்கடிக்குள்ளாகாத வகையில்
எதிர்வரும் 03 மாதங்களுக்கு மின் சக்தியை முகாமைத்துவம் செய்ய சரியான முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நான்கு குழுக்களாக பிரித்து A,B,C,D என்ற அடிப்படையில் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறார்கள். அதற்கு நாங்கள் விரும்பவில்லை. அதற்கு காரணம் அதனூடாக மக்கள் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள்.
கொள்ளளவு மற்றும் எங்களிடமிருக்கும் வளங்களுக்கான கேள்வி விநியோகத்தின் அடிப்படையிலான முறையொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.