வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாக வாய்ப்பு, 19ம் திகதி தொடக்கம் கனமழை..! சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாக வாய்ப்பு, 19ம் திகதி தொடக்கம் கனமழை..! சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

வடமாகாணத்தில் பரவலாக பெய்துவந்த கனமழை இன்று பிற்பகல் தொடக்கம் படிப்படியாக குறையும் என கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, 

ஆனால் எதிர்வரும் 18.02.2022 வெள்ளிக்கிழமை வங்காள விரிகுடாவில் ஒரு புதிய தாழமுக்கம் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவும் கூறியிருக்கின்றார். 

இதனால் எதிர்வரும் 19.02.2022 சனிக்கிழமை முதல் 22.02.2022 செவ்வாய்க்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

நெல், வெங்காயம் மற்றும் உழுந்து பயிர்களின் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்வரும் 18.02.2022 வெள்ளிக்கிழமைக்கு முன்பாக தங்களது அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது. 

ஏனெனில் எதிர்வரும் 19.02.2022 முதல் மழை கிடைத்தால் அது மிதமான வேகமான காற்றுடன் கூடிய மழையாகவே கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு