வடமாகாணத்திலுள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி..!
வடமாகாண பண்ணையாளர்கள் மூலம் பால் உற்பத்தியை அதகரிப்பதற்காக வடமாகாணத்திலுள்ள சகல கால்நடை வைத்திய திணைக்களங்களுக்கும் 3.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தேசிய அளவில் பால் உற்பத்தியில் வடமாகாணத்திற்கு சிறப்பிடம் உள்ளது. அதனை மேலும் அதிகரிப்பதற்கு மத்திய அரசாங்கம் விசேடமாக சுமார் 90 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதனை தலா 3.5 மில்லியன் ரூபாய் வீதம்
சகல கால்நடை திணைக்களங்களுக்கும் வழங்கி எமது மாகாணத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஆளுநர் மேலும் தொிவித்திருக்கின்றார்.