யாழ்.நெல்லியடியில் தவறான தொலைபேசி அழைப்பினால் யுவதி கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவம்..! பிரதான சந்தேகநபர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் தவறான தொலைபேசி அழைப்பினால் யுவதி கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவம்..! பிரதான சந்தேகநபர் கைது..

யாழ்.நெல்லியடி பகுதியில் கூட்டு வன்புணர்வு சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தொலைபேசியில் வந்த தவறான அழைப்பை தொடர்ந்து அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திய யுவதிக்கும் இளைஞருக்குமிடையில் காதல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த யுவதியை நோில் சந்திக்க வருமாறு இளைஞர் அழைத்துள்ளார் இதனையடுத்து யுவதியும் வீட்டிலிருந்த நகைகள் மற்றும் 40 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். 

பின்னர் யுவதியுடன் உல்லாசமாக இருந்த இளைஞர் யுவதி கொண்டுவந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். பின்னர் அங்குவந்த மேலும் 3 பேர் தாம் இளைஞனின் நண்பர்கள் என கூறிய நபர்கள், 

யுவதியை வன்புணர்ந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்றய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட நிலையில் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

மேலும் 21ம் திகதி அடையாள அணிவகுப்பை நடாத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு