SuperTopAds

சண்டியனாக மாறிய சதோசா விற்பனை நிலைய ஊழியர்..! பொதுமகன் மீது தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
சண்டியனாக மாறிய சதோசா விற்பனை நிலைய ஊழியர்..! பொதுமகன் மீது தாக்குதல்..

வவுனியா - சதோசா விற்பனை நிலையத்தில் பொருட்களை வாங்குவதற்காக சென்ற பொதுமகன் மீது அங்கு கடமையிலிருந்த உத்தியோகஸ்த்தர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு பொருளை கொள்வனவு செய்ய சென்ற வாடிக்கையாளரொருவர் அங்குள்ள பொருட்களின் விலைகள் தொடர்பில் கடமையில் இருந்த ஊழியரிடம் கேட்டுள்ளார்.

இதன்போது ஊழியருக்கும் வாடிக்கையாளருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் ஊழியர் வாடிக்கையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக வாடிக்கையாரின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.இந்நிலையில் வவுனியா பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.