கட்டுப்பாடற்ற வேகம் காரணமாக மரத்துடன் மோதிய கனரக வாகனம்!

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம் காரணமாக மரத்துடன் மோதிய கனரக வாகனம்!

வவுனியா - பம்பைமடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி இரும்புக் கேடர்களை ஏற்றிவந்த கென்டர் வாகனம் பம்பைமடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 

வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது. 

விபத்தின்போது வாகனத்தில் பலர் பயணித்திருந்த நிலையில் இருவர் படுகாயமைடந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஏனையவர்கள் சிறுகாயமடைந்துள்ளனர்.விபத்து தொடர்பாக பூவசரங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு