1 வயது மற்றும் 2 வயது குழுந்தைகள் உட்பட 17 பேருக்கு தொற்று..! தொடரும் அபாயம்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் 1வயது மற்றும் 2 வயதது குழுந்தைகள் இருவர் அடங்கலாக 14 பேருக்கும், வடக்கில் 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைக் கழக மருத்துவபீடம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகிய ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இவ்வாறு 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் - 14 பேர் (ஒன்று மற்றும் 2 வயது ஆண் குழந்தைகள் உட்பட) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர் (16 வயது சிறுமி மற்றும் 72 வயது முதியவர்)
கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் - ஒருவர் (33 வயது பெண்)இவ்வாறு 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.