SuperTopAds

யாழ்.காரைநகரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 135 இந்திய இழுவை படகுகள் விற்க்கப்பட்டது! அதிகபட்சம் 48 அடி நீள படகு 13 லட்சத்து 50 ஆயிரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 135 இந்திய இழுவை படகுகள் விற்க்கப்பட்டது! அதிகபட்சம் 48 அடி நீள படகு 13 லட்சத்து 50 ஆயிரம்..

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக கைப்பற்றப்பட்ட இழுவை படகுகளில் சுமார் 135 படகுகள் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 

இதில் 48அடி நீளமான மீன்பிடிப் படகொன்று அதிக தொகையாக 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு காரைநகரில் 

ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன்,இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக 

அதிகமனோர் பார்வையிட்ட நிலையில் இன்றைய தினமும் பலரும் பார்வையிட்டனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 

வருகை தந்தவர்கள் ஏலத்தில் ஆரம்ப வைப்பு தொகையாக 1,000 ரூபாய் பணத்தை செலுத்தி ஏலத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மொத்தமாக 135 படகுகளும் 52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையின் 5 துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகள் 

இன்று முதல் 5 இடங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.