SuperTopAds

இந்திய இழுவை படகுகளை பாதுகாக்கும் வேலையை இலங்கை கடற்படை நிறுத்தவேண்டும்..! கொந்தளித்த மீனவர்கள்..

ஆசிரியர் - Editor I
இந்திய இழுவை படகுகளை பாதுகாக்கும் வேலையை இலங்கை கடற்படை நிறுத்தவேண்டும்..! கொந்தளித்த மீனவர்கள்..

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய இழுவை படகுகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். கடபடையினர் தலையிடாமல் கட்டுப்படுத்துங்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நேற்று யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் போராட்டத்துக்கு வருகைதந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய இழுவை படகுகளை இலங்கை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது.

கடற்தொழில் அமைச்சர் என்ற வகையில் எமது பிரச்சினைகள் தொடர்பில் பல முறை தங்களிடம் தெரியப்படுத்தினோம். ஆனால் எமது பிரச்சினை தீராப் பிரச்சினையாக செல்கிறது. அத்து மீறி வரும் இந்தியா இழுவை படகுங்களை நாங்கள்

விரட்டச் சென்றால் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக அவர்களை அனுப்பி வைக்கிறார்கள். எல்லை தாண்டிவரும் இந்திய ரோலர்களை பாதுகாக்கும் செயற்பாட்டை கடற்படையினர் நிறுத்த வேண்டும். 

அவர்களை எவ்வாறு தடுப்பது என எமக்குத் தெரியும். ஆகவே அமைச்சர் என்ற வகையில் கடற்படையினரை தலையீடு செய்ய வேண்டாம் என நீங்கள் கூறினால் போதும் நாங்கள் பார்த்துக்கொள்வோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.