விசேட அதிரடிப்படையினருடன் சென்று பேச்சுவார்த்தை நடத்திய டக்ளஸ்..! தீர்வின்றி வெளியேறினார்..

ஆசிரியர் - Editor I
விசேட அதிரடிப்படையினருடன் சென்று பேச்சுவார்த்தை நடத்திய டக்ளஸ்..! தீர்வின்றி வெளியேறினார்..

யாழ்.பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் நடத்திவரும் இடத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் சென்று பேச்சுவார்த்தை நடாத்தியபோதும் தீர்வின்றி அமைச்சர் வெளியேறியுள்ளார். 

இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாகவும் மீனவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பல தரப்பினரும் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு சென்று மீனவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த போதும் எந்தவிதமான உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில் இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா 

சென்று போச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.இதன்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவாதத்தை எழுத்து மூலமாக தர வேண்டும். 

என மீனவர்களால் அமைச்சரிடம் கோரிகை முன்வைக்கப்பட்டது.இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்லஸ் தேவானந்தா எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும் தான் வாய் மூலமாகவே உத்தரவாதத்தையே தர முடியும் என கூறியதை அடுத்து 

அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. பின்னர் போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வெளியேறிய நிலையிலும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.போராட்டம் இடம்பெறும் பகுதியில் 

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு