யாழ்.பருத்தித்துறையில் வேண்டுமென்றே படையினருடன் முரண்பட்டு அதனை வீடியோ பதிவு செய்த 3 பேர் கைது! வெளிநாடு செல்வதே நோக்கமாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் வேண்டுமென்றே படையினருடன் முரண்பட்டு அதனை வீடியோ பதிவு செய்த 3 பேர் கைது! வெளிநாடு செல்வதே நோக்கமாம்..

யாழ்.பருத்தித்துறை பகுதியில் வேண்டுமென்றே படையினரை ஏசி அதனை வீடியோ பதிவு செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த 3 பேரும் வெளிநாடு செல்வதற்காக அவ்வாறு நடந்து கொண்டமை அம்பலமாகியுள்ளது. 

வீதி ரோந்தில் ஈடுபட்ட இராணுவத்திரை ஏசுவது போன்று ஒருவர் பாசாங்கு செய்ய இரு நண்பர்கள் அதனை படமாக்கியதாக இராணுவத்தினர் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் மூன்று இளைஞர்களும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மூன்று இளைஞர்களிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டதும் இளைஞர்கள் விடுவிக்கப்படுவார்களா? 

அல்லது நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்களா என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio