நண்பர்களுடன் தேனீர் அருந்திக் கொண்டிருந்த ஓய்வுநிலை படை அதிகாரி உயிரிழப்பு! யாழ்.மிருசுவில் - உசன் பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
நண்பர்களுடன் தேனீர் அருந்திக் கொண்டிருந்த ஓய்வுநிலை படை அதிகாரி உயிரிழப்பு! யாழ்.மிருசுவில் - உசன் பகுதியில் சம்பவம்..

யாழ்.மிருசுவில் - உசன் பகுதியில் உள்ள ஹோட்டலில் தேனீர் குடித்துக் கொண்டிருந்த ஓய்வுநிலை படை அதிகாரி ஒருவர் திடீரென மூர்ச்சையடைந்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றிருக்கின்றது, மாத்தளையை சேர்ந்த 51 வயதான ஜெயசிங்க என்பவர் நண்பர்களுடன் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். 

இதன்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.  

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio