SuperTopAds

யாழ்.மாவட்ட செயலக கூட்டத்தில் கடுப்பான அங்கஜன் எம்.பி! புதிய பேருந்து நிலைய வேதாளத்தை அடக்க முடியாமல் திணறும் வடக்கு அரசியல்வாதிகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட செயலக கூட்டத்தில் கடுப்பான அங்கஜன் எம்.பி! புதிய பேருந்து நிலைய வேதாளத்தை அடக்க முடியாமல் திணறும் வடக்கு அரசியல்வாதிகள்..

யாழ்.நகரில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பயணிகள் பஸ் தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் ராமநாதனுக்கும்  இ.போ.ச வட பிராந்திய பிரதமர் முகாமையாளருக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் வீதிப் போக்குவரத்து விபத்துக்களை தடுப்பதற்கான மாவட்ட மட்டக் கலந்துரையாடலின்போதே இவ்வாறு வாக்குவாதம் இடம்பெற்றது.

புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் ஏன் இ.போ.ச போருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என அங்கயன் இராமநாதன் வடபிராந்திய பிரதான முகாமையாளர் சிவா குணபாலச் செல்வத்திடம் இடம் கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதிலளித்த முகாமையாளர் குறித்த சேவை வழங்குவதற்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை தெரிவிக்க அதைத்தான் சரி செய்து தருகிறோம் இப்போது சேவையில் ஈடுபடபோகிறீர்கள் என அங்கயன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முகாமையாளர் நான் மட்டும் முடிவெடுக்க முடியாது தொழிற்சங்க அத்துடன் கலந்துரையாடிய முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார். 

குறித்த பதிலால் கோபமடைந்த அங்கயன் பிரதான முகாமையாளராக இருக்கின்ற உங்களால் முடிவெடுக்க முடியாது என்றால் முடிவெடுக்கக் கூடிய ஒருவரை நியமித்து பிரச்சினையை சரி செய்வோம் எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த பிரதான முகாமையாளர் தொழிற் சங்கத்துடன் கலந்துரையாடி தான் முடிவு எடுக்கவேண்டும் என மீண்டும் தெரிவித்தார். 

இந்நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு அரசாங்க அதிபர் தலைமையில் இரு தரப்பினரும் கலந்துரையாடி இ.போச புதிய பேருந்து நிலையத்திற்குபோகும் திகதியை கூற வேண்டுமென தெரிவித்தார் .