தயா மாஸ்டருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டணை! வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு..

ஆசிரியர் - Editor I
தயா மாஸ்டருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டணை! வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு..

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடக பேச்சாளரான தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், தடைசெய்யப்பட்ட அமைப்பான தமீழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமைக்கு தயா மாஸ்டருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு