யாழ்.பருத்தித்துறையில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை..! பல வர்த்தகர்கள் மாட்டினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை..! பல வர்த்தகர்கள் மாட்டினர்..

யாழ்.பருத்தித்துறை - மந்திகை பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் நேற்றய தினம் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். 

இதன்போது பல உணவகங்கள் சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை ஒன்றாக பேணியமை, பிளாஸ்டிக் தட்டில் இடியப்பம் தயாரிப்பு, 

ஊழியர் தங்கும் அறையை உணவுப்பொருள் களஞ்சியமாக பேணியமை, காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை, 

காலாவதியான பொருளை காலாவதியாகாத பொருளுடன் சூட்சுமமான முறையில் காலாவதி திகதி தெரியாதவாறு இலவச இணைப்பாக இணைத்திருந்தமை, 

பூஞ்சணம் வளர்ந்த பனங்கட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தமை போன்ற சுகாதாரத்துக்கு விரோதமான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பொருட்கள் அழிக்கப்பட்டதோடு சட்டநடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதியளவு அறிவூட்டலும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டபோதும் இவ்வாறு பொறுப்பற்றவிதமாக வர்த்தகர்கள் நடந்துகொள்வது 

சமுகவிரோதச் செயலாகும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு