யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் 4 முக்கிய நகரங்களில் காற்று மாசு..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் 4 முக்கிய நகரங்களில் காற்று மாசு..!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய 4 நகர்களில் காற்று மாசுபாட்டின் வீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளிலேயே காற்றின் தர சுட்டெண் மிகவும் மோசமான நிலையில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடகிழக்கு வளிமண்டலத்திலுள்ள மாசுபட்ட மேகங்கள், நிலவும் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக உள்நோக்கி 

கொண்டு வரப்பட்ட மாசடைந்த மேகங்களின் தாக்கமே இவ்வாறு அதிகரித்த காற்று மாசுபாட்டிற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது காற்று மாசுபாட்டிற்கு ஒரு முக்கிய காரணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக மேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் குறிப்பாக அதிகளவில் பாதிக்கப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு