SuperTopAds

வடமாகாணத்தில் மேலும் 7622 ஹெக்ரெயர் தமிழ் மக்களின் விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்களை அபகரிக்க பாரிய திட்டம்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் மேலும் 7622 ஹெக்ரெயர் தமிழ் மக்களின் விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்களை அபகரிக்க பாரிய திட்டம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் விவசாய மற்றும பூர்விக நிலங்களான 7 ஆயிரத்து 622 ஹெக்ரெயர் நிலப்பரப்பை சுவீகரிக்க வனவள திணைக்களம் முயற்சிக்கின்றது. இந்த நடவடிக்கைகயை உடன் நிறுத்தவேண்டும். என வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்னநாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான 3ம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது, வனவள திணைக்களம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வனங்களை அபகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 2749.53 ஹெக்ரெயரும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 2275.61 ஹெக்ரெயரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 1764.81 ஹெக்ரெயரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 530.37 ஹெக்ரெயரும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 286.74 ஹெக்ரெயரும், 

வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 14.95 ஹெக்ரெயருமாக 7622 ஹெக்ரெயர் பொதுமக்களின் விவசாய மற்றும் பூர்வீக நிலங்களை சுவீகரிப்பதற்கான வர்ததமானி அறிவித்தலை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த முயற்சியை உடனடியாக நிறுத்தவேண்டும் என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு

அமைச்சர் சீ.பி.ரத்ணாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.