ATM (ஏ.ரி.எம்) இயந்திரத்தில் தவறவிட்ட பணத்தை சுருட்டிய பெண்..! அருகில் இருந்தவர்கள் கண்டதால் மன்னிப்புகோரி பணத்தை ஒப்படைத்தார்..
ATM (ஏ.ரி.எம்) இயந்திரத்தில் நபர் ஒருவர் தவறவிட்ட பணத்தை பெண் ஒருவர் எடுத்து வைத்துக் கொண்டதை அருகில் இருந்து அவதானித்த நபர்கள் குறித்த பெண்ணை எச்சரித்ததுடன், பணத்தை தவறவிட்டு சென்ற நபரை அழைத்து அவரிடமே பணத்தை கொடுத்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ATM (ஏ.ரி.எம்) இயந்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றது. நேற்றய தினம் காலை நபர் ஒருவர் பணத்தை எடுக்க மறந்து வங்கி அட்டையை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனை வெளியில் இருந்து அவதானித்த பெண் ஒருவர்,
உடனடியாகவே ATM (ஏ.ரி.எம்) அறைக்குள் நுழைந்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்து தனது பைக்குள் வைத்துள்ளார். இந்த சம்பவங்களை அருகில் இருந்த வேறு சிலரும் அவதானித்துக் கொண்ட நிலையில் பணத்திற்குரிய நபரை அழைத்து அந்த பெண்ணிடமிருந்து பணத்தை வாங்கி கொடுத்ததுடன்,
பணத்தை எடுத்துவைத்துக் கொண்ட பெண்ணை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.