யாழ்.மாநகர சபை மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனின் மேதினச் செய்தி

ஆசிரியர் - Admin
யாழ்.மாநகர சபை மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனின் மேதினச் செய்தி

தங்களின் உரிமைக்காக அயராது போராடி தமது உரிமைகளை வென்றெடுத்து மேதினத்தை உருவாக்கிய தொழிலாளர்களின் உரிமைப்போராட்டம் போல் இன்றும் எமது மண்ணில் தொடருகின்ற எமது இனத்தின் உரிமைக்கான போராட்டங்களும் நிச்சயம் பெற்றி பெறும். அந்த நாள் உமது உரிமையை ஜனநாயக ரீதியில் வென்றெடுத்த நாள் என தமிழ்த் தேசிய இனத்தின் நீண்ட வரலாற்றுப் பக்கத்தில் பதிவாகும். 

என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , 

இது அனைவருக்குமான உலகம். இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கின்றது. தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம் என்ற உண்மையை, பாட்டாளி வர்க்கம் இரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள் தான் மே முதல் நாள் ஆகும். அந்த வகையில் மே நாள் உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உன்னதமான மேன்மையான திருநாள்.

'அதிகாலை முதல் அந்தி சாயும் வரை' என்பதுதான்அப்போது வேலை நாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை வெளிப்படுத்திய அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான உரிமைப் போராட்ட மும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கின்றது இதன் பிறகே உழைக்கும் மக்களை உலகம் மனிதாபிமானத்துடன் பார்க்க கற்றுக்கொண்டது.

இன்றும் எம் தமிழ்தேசத்து மக்கள் தங்களுக்களின் உரிமைக்கான போராட் டங்களை பல காலங்களாக தெருக்களில் தொடருகின்றனர். ஆனால் அவர்களை எந்த அரசாங்கமும் ஏன் இந்த உலகமும் மனிதாபிமானத்துடன் பார்க்க கற்றுக் கொள்ளவில்லை இருப்பினும் அன்று தங்களின் உரிமைக்காக அயராது போராடி தமது உரிமைகளை வென்றெடுத்து மேதினத்தை உருவாக்கிய தொழிலாளர்களின் உரிமைப்போராட்டம் போல் இன்றும் எமது மண்ணில் தொடருகின்ற எமது இனத்தின் உரிமைக்கான போராட் டங்களும் நிச்சயம் பெற்றி பெறும். அந்த நாள் உமது உரிமையை ஜனநாயக ரீதியின் வென்றெடுத்த நாள் என தமிழ் தேசிய இனத்தின் நீண்ட வரலாற்றுப் பக்கத்தில் பதிவாகும் 

உழைக்கும் கைகளால் தான் தம் வாழ்வில் வளமும் நலமும் பெருகும் என்ற உண்மையை தன் நெஞ்சில் நிறுத்தி தமிழ்தேசத்தின்; வளர்ச்சிக்காகவும், அதன் பொருளாதார இருப்பிற்காகவும் அயராது உழைத்திடும் எமது தொழிலாளர்கள், எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு