SuperTopAds

வைத்தியசாலை கொண்டுசெல்லும் வழியில் தப்பி ஓடிய கைதிக்கு நடந்த சம்பவம்!

ஆசிரியர் - Editor I
வைத்தியசாலை கொண்டுசெல்லும் வழியில் தப்பி ஓடிய கைதிக்கு நடந்த சம்பவம்!

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் கைதி ஒருவர் தப்பி ஓடிய நிலையில் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளார். 

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றது. 

சம்பவத்தில் வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபரை தேடும் பணியில் சிறைச்சாலை உத்தியோத்தர்களும், பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர். 

பொலிஸார் துரிதமாக செயற்பட்டு வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் CCTV கெமராவின் உதவியுடன் 

தேடுதலை மேற்கொண்டு குறித்த நபரை மீளவும் கைது செய்துள்ளனர்.