யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியை விடுவிக்க விமானப்படை, இராணுவம் இணக்கம்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியை விடுவிக்க விமானப்படை, இராணுவம் இணக்கம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் செல்லும் பிரதான வீதியாக கடந்த ஆட்சியில் மாற்றப்பட்ட   கட்டுவன் - மயிலிட்டி வீதியில்  400 மீற்றர் வீதியை  விடுவிக்க விமானப் படை, இராணுவத்தினர் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த வீதியில் உயர் பாதுகாப்பு வலயமாக  ஆக்கிரமித்து எல்லையிடப்பட்டுள்ள  முட்கம்பி வீதியை சுமார் 6 மீற்றர் உள்நகர்த்தி வீதியை படைத்தரப்பு கொள்கை ரீதியில் இணங்கியுள்ளதாகத் அறியமுடிகின்றது.  

எனினும் இந்த வீதி எப்போது விடுவிக்கப்படும்? என்பது குறித்து கால எல்லை அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சு உயர்மட்டத்துடன் பேசி இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

நேற்று இந்தப் பகுதிக்கு விமானப் படையினர் சகிதம் வந்த வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் பாதுகாப்பு வலயமாக உள்வாங்கப்பட்டுள்ள வீதி அமைந்துள்ள பகுதியை ட்ரோன் கமெரா மூலம் ஒளிப்பதிவு செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆக்கிரமித்துள்ள கட்டுவன் - மயிலிட்டி 400 மீற்றர் வீதியை விடுவிப்பு என்பது இழுபறியில் உள்ளதுடன்   இதனால் விமான நிலையத்துக்கும் இந்த வீதியால் மயிலிடிக்கு செல்வதற்கும்  போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தின் இந்த வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டாார். எனினும் அதன் பின்னரும் இந்த நடவடிக்கைகள் தாமதமடைந்து வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு