இரு தனிநபர்களுக்கிடையிலான பிரச்சினையால் பூசகரை விரட்டிவிட்டு கோவிலை பூட்டிவைத்து அராஜகம்! நடவடிக்கை எடுக்ககோரும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
இரு தனிநபர்களுக்கிடையிலான பிரச்சினையால் பூசகரை விரட்டிவிட்டு கோவிலை பூட்டிவைத்து அராஜகம்! நடவடிக்கை எடுக்ககோரும் மக்கள்..

இரு தனிநபர்களுக்கிடையிலான மோதலால் ஆலய பூசைகள் நிறுத்தப்பட்டு, பூசகர் வெளியேற்றப்பட்டதுடன் ஆலயம் பூட்டப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் மாங்குளம் - இத்திமரத்தடி சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பிரதேச செயலரிடம் முறையிடப்பட்டுள்ளது. 

ஒரு மத வழிபாட்டு தலத்தை சிலர் தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்துவது நியாயமற்றது. 

இந்த சம்பவம் தொடர்பாக சைவ அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், 

பிரதேச செயலர் மற்றும் இந்து கலாசார அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலும் குறிப்பிட்டிருக்கின்றனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

Radio