யாழ்ப்பாணத்திலுள்ள வன்முறை குழு ஒன்றின் சூத்திரதாரி யாழ்.சுன்னாகம் பொலிஸாரினால் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலுள்ள வன்முறை குழு ஒன்றின் சூத்திரதாரி யாழ்.சுன்னாகம் பொலிஸாரினால் கைது..!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தொிவித்துள்ளனர். 

வன்முறை சம்பவங்கள் பலவற்றின் சூத்தரதாரியான குறித்த நபர் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த குறித்தநபர் சுன்னாகம் பிரதேசத்தில் நடமாடுகிறார் என பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறியுள்ளனர். 

சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். 

Radio