கல்வி காருண்யன் E.S.P.நாகரத்தினத்திற்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிய கொழும்பு பல்கலைகழகம்..!

ஆசிரியர் - Editor I
கல்வி காருண்யன் E.S.P.நாகரத்தினத்திற்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிய கொழும்பு பல்கலைகழகம்..!

கல்வி காருண்யன், தொழிலதிபர், லயன் .E.S.P.நாகரத்தினத்திற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தினால் மனிதநேயம் மற்றும் சமூகசேவைகளுக்காக கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

இக் கலாநிதி பட்டமானது கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடத்தின் முன்னால்  பீடாதிபதிபேராசிரியர் திரு.சந்திரசேகரம் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

காரைநகரினை சொந்த இடமாக கொண்ட பிரபல தொழிலதிபர் கல்விகாருன்யன் E.S.P நாகரத்தினம் வடபகுதியில் கல்வி, விளையாட்டு துறைக்கு 

தன்னாலான பல்வேறு சேவைகளை ஆற்றி வருவதோடு இந்து ஆலயங்களுக்கும் தன்னாலான உதவிகளை வழங்கி வரும் நிலையில் 

கொழும்பு பல்கலைக் கழகத்தினால் கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio