சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிக்கு செல்லும் முல்லைத்தீவு யுவதி!

ஆசிரியர் - Admin
சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிக்கு செல்லும் முல்லைத்தீவு யுவதி!

பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொள்ளும் முல்லைத்தீவு யுவதிக்கு தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் நிதி அன்பளிப்பு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து, குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி என்பவரே பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகியுள்ளார்.

இவரது குடும்ப நிதி நிலமைகள் காரணமாக போட்டியில் பங்கு கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்துடன் இருந்த யுவதி விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்) ஏற்பாட்டில் பல்வேறு நபர்களின் நிதி அன்பளிப்பு ஊடாக 105000 நிதியுதவி நேற்று மாலை குறித்த யுவதியிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்) வேண்டுகோளின் அடிப்படையில் 93 மற்றும் 96 மகாவித்தியர்கள் நற்பணிமன்றத்தால் ரூபா 65000 நிதியும் மகி மகேந்திரராஜாவின் நிதி பங்களிப்பாக 10000 ரூபாவும், கண்ணன் புஸ்பராஜாவின் நிதி பங்களிப்பாக 10000 ரூபாவும், தயா நமசிவாயம் நிதி பங்களிப்பாக 10000 ரூபாவும், 30000 நிதியுதவியும், வவுனியாவை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவருடைய நிதி பங்களிப்பாக 10000 ரூபாவாகவும் மொத்தமாக 105000 (ஒரு இலட்சத்து ஜயாயிரம் ரூபா) நிதி நேற்று மாலை வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்த மாணவி பாகிஸ்தானில் வெற்றி பெற்று தங்க பதக்கம் கிடைத்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம் எனவும், இந்த உதவியை வழங்கி வைத்த அத்தனை உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு