வைத்தியர் சுகயீன விடுமுறையில், பதில் கடமைக்கு வைத்தியர் இல்லை! சிகிச்சை பெற முடியாமல் அந்தரித்த நோயாளர்கள்..

ஆசிரியர் - Editor I
வைத்தியர் சுகயீன விடுமுறையில், பதில் கடமைக்கு வைத்தியர் இல்லை! சிகிச்சை பெற முடியாமல் அந்தரித்த நோயாளர்கள்..

யாழ்.வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாததால் சிகிச்சை பெறுவதற்கு வந்தருந்த சுமார் 100ற்கும் மேற்ட்ட நோயாளிகள் சிகிசசை பெறமுடியாமல் அந்தரித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாாக்கு, தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவேளை, வைத்தியரின் மகளினால் அந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனிடம் தொடர்பு கொண்டபோது குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் சுகயீன விடுமுறையை முறைப்படி பெற்றுள்ளார். 

மேலும் தற்போது அந்த வைத்தியசாலைக்கு ஒரு வைத்தியர் மட்டுமே சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். வைத்தியர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு வரமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேறு ஒரு வைத்தியரை பதில் கடமைக்கு அமர்த்தியுள்ளோம். அவர் வேறு ஒரு வைத்தியசாலையில் கடமை புரிகின்றார். வைத்தியசாலையின் கடமைகளை முடித்துவிட்டு வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு வருவார். 

இந்த வைத்தியர் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி, எதிர்காலத்தில் பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சிப்போம் என்றார். அதேவேளை அரைவாசிக்கும் அதிகமான நோயாளிகள் 

வைத்தியர் வரவில்லை என வீட்டிற்கு சென்றுவிட்டனர். பின்னர் 11.30 மணியளவில் வேறொரு வைத்தியர் அங்கு கடமைக்கு வந்திருந்தார். இது தொடர்பாக அங்கிருந்த நோயாளிகள் தெரிவிக்கையில்,

இந்த வைத்தியசாலை ஒரு பிரதேச வைத்தியசாலை தரத்திற்குள் உள்ளடக்கப்பட்ட வைத்தியசாலை. ஆனால் ஒரு வைத்தியர் மட்டுமே இங்கு கடமை புரிகின்றார். அத்துடன் 24 மணிநேர சேவைகளும் இங்கு வழங்கப்படுவதில்லை.

வைத்தியசாலையை சூழவுள்ள பிரதேசங்களை சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த வைத்தியசாலையில் சேவையை பெறுவதற்கு உள்ளனர். ஆனால் ஒரு வைத்தியருடன், குறிப்பிட்ட அளவு நேரம்வரை மட்டுமே சேவை நடக்கிறது. 

இதனால் அனைத்து நோயாளிகளாலும் சிகிச்சைகளையோ அல்லது வைத்திய ஆலோசனைகளையோ பெற முடிவதில்லை. இதனால் இங்கு சிகிச்சைகளைப் பெற முடியாத மக்கள் பல சிரமங்களுக்கும் மத்தியில் 

அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளையோ அல்லது யாழ்.போதனா வைத்தியசாலையையோ நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 

எனவே இந்த வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களை கடமைக்கு அமர்த்தி 24 மணி நேர சேவையை நடைமுறைப்படுத்தினால் மக்கள் தமக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையோ 

அல்லது சிகிச்சைகளையோ இலகுவாக பெற்றுக் கொள்வார்கள் என்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு