பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை!!

ஆசிரியர் - Editor II
பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை!!

மருத்துவ உலகில் அடுத்த கட்டமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க வைத்தியர்கள் வரலாற்று சாதனை புரிந்துள்ளனர். 

இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அமெரிக்காவை சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னாட் என்பவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருந்தது.

ஆனால் மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காது என்பதை அடுத்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு டேவிட் பென்னட்டும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து அவருக்கு மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பன்றியின் இதயத்தை அவருக்கு வைத்தியர்கள் வெற்றிகரமாக பொருத்தினார்கள். 

பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக் கொண்ட முதல் நபர் என்ற பெருமையை டேவிட் பென்னட் பெற்றார். அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். டேவிட் பென்னட் உடல்நிலை நன்றாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு