யாழ்.மாவட்டத்தில் பாண் மட்டும் உற்பத்தி செய்யும் நிலையேற்படப்போகிறது! கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை..
யாழ்.மாவட்ட வெதுப்பகங்களுக்கு கோதுமை மா மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகம் செய்யப்படுவதால் வெதுப்பக உற்பத்தி பொருட்கள் குறைவடைவதாக கூறியுள்ள யாழ்.மாவட்ட கூட்டுறவு வெதுப்பக சங்கத்தின் பேச்சாளர் கந்தசாமி குணரட்ணம்,
தொடர்ச்சியாக கோதுமை விநியோகம் தடைப்படுமாக இருந்தால் பாணை தவிர இதர உற்பத்திகள் செய்ய முடியாத நிலை தோன்றும் எனவும் கூறியுள்ளார்.