வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளராகிறாரா?
யாழ்.பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராக வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
தற்போது வடமாகாண சுகாதாரப் பணிப்பாளராக கடமையாற்றிவரும் கேதீஸ்வரன் பதில் கடமையாக யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளராக கடமையாற்றிய வருகிறார்.
2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 காலப்பகுதி வரை யாழ்.பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில் வடமாகாண சுகாதார பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
வடமாகாண சுகாதார பணிப்பாளராக நியமிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார், அதற்காக இரண்டு விடையதானங்களுக்குமான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளராக பணி இடமாற்றம் பெறும் நிலையில் பதில் கடமை நிமிர்த்தம் வடக்கு சுகாதாரப் பணிப்பாளராகவும் தொடர்வார் என தொியவருகின்றது.