வடமாகாண ஆளுநரின் ஆலோசனை கிளிநொச்சியில் பின்பற்றப்படுகிறது, யாழ்ப்பாணத்தில் கிடப்பில், அதிகாரிகள் அசண்டையீனம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநரின் ஆலோசனை கிளிநொச்சியில் பின்பற்றப்படுகிறது, யாழ்ப்பாணத்தில் கிடப்பில், அதிகாரிகள் அசண்டையீனம்..

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் ஆலோசனைக்கமைய நாட்பட்ட நோயாளிகள், படுக்கையிலுள்ள நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை வழங்கம் நடைமுறை கிளிநொச்சி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

எனினும் யாழ்.மாவட்டத்தில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் தொடங்கப்படாத நிலையில் உள்ளதுடன், அவ்வாறான மந்த நிலைக்கு சில பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் காரணம் எனவும் கூறப்படுகின்றது. 

ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடந்த வருட இறுதியில் ஊடகப் பிரதானிகளை சந்தித்தபோது வடமாகாணத்தில் வீடுகளில் தங்கியுள்ள நாட்பட்ட நோயாளிகள் மற்றும் படுக்கையில் நீண்ட நாட்களாக இருக்கிறவர்களுக்கு 

வீடுகளுக்கே நோில் சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தை ஆரம்பிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த 1ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல் யாழ்.மாவட்டத்தில் அதிகளவான நாட்பட்ட மற்றும் படுக்கையில் உள்ள நோயாளர்கள் இருக்கின்ற நிலையில் குறித்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்கவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு