யாழ்.நெல்லியடி பேருந்து நிலையத்தில் இ.போ.சபையினர் - ஆட்டோ ஓட்டுநர்கள் இடையில் மோதல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடி பேருந்து நிலையத்தில் இ.போ.சபையினர் - ஆட்டோ ஓட்டுநர்கள் இடையில் மோதல்!

யாழ்.நெல்லியடி பேருந்து நிலையத்தில் இ.போ.சபையினருக்கும் வாடகை ஆட்டோ ஓட்டுநர்களுக்குமிடையில் ஏற்பட்ட தகராறில் பேருந்து ஒன்றின் மீதும், சாரதி, நடத்துனர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. 

தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் சாரதி மற்றும் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து இ.போ.ச பருத்தித்துறை சாலை இ.போ.ச பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடாத்த தயாராகினர். எனினும் சம்பவத்தையடுத்து

துரிதமாக செயற்பட்ட பொலிஸார் நெடுந்துார சேவைகள் மற்றும் பாடசாலை சேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பணிப்புறக்கணிப்பை நிறுத்துமாறு இ.போ.சபையினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

இதன்போது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும், நெல்லியடி பேருந்து நிலையத்தில் உள்ள நீண்டகால இழுபறி தீர்க்கப்படவேண்டும் என்ற 3 கோரிக்கைகளை 

நிறைவேற்ற பொலிஸார் உத்தரவாதமளித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு