பாடசாலை அதிபரை மிரட்டி தொடர்ச்சியாக பணம் பறித்த 23 வயது இளைஞன் கைது! ஏன் மிரட்டினான்? அதிபர் ஏன் மிரண்டார் என்பது தொியாது..
பொலிஸ் உத்தியோகஸ்த்தர் என கூறி பாடசாலை அதிபர் ஒருவரை மிரட்டி தொடர்ச்சியாக பணம் பறித்துவந்த 23வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன வரிசிட்டை மற்றும் லைசென்ஸ் என்பவற்றை பறித்து வைத்து கொண்டு பணம் கறந்த சம்பவம் ஒன்று சில நாட்களின் முன் பதிவாகி உள்ளது.
பாடசாலை அதிபரிடம் தான் பொலீஸ் காரன் எனசொல்லி பல தடவைகள் பணம் பெற்றுள்ளார் இவ்வாறு 138 000 ஆயிரம் ரூபா பணத்தினை பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலை அதிபரை மிரட்டியும் இவர் பணம் பெற்று வந்துள்ளார். கடைசியில் பொறுமை தாங்க முடியாத அதிபர் முல்லைத்தீவு
மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி கேட்டுள்ளார்,
சம்பந்தப்பட்ட அதிபரை விசாரித்தபோது இது ஒரு பண மோசடி என தெரிய வந்தது,மேலும் குறித்த இளைஞன் மறுபடியும் அதிபருக்கு போன் பண்ணி பணம் கேட்டுள்ளார்,
குறித்த அதிபர் இது குறித்து பொலிஸாரிடம் கூறி, பொலிஸார் சிவில் உடையில் இளைஞனை பிடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
அதிபர் குறித்த இளைஞனை புதுக்குடியிருப்பு சந்தியில் வந்தால் பணம் தருவேன் என கூறியுள்ளார்,
இதை நம்பிய திருடன் அதிபரிடம் பணத்தை சுருட்டலாம் என பைக் இல் புதுக்குடியிருப்பு சந்தியில் வந்து இறங்கியுள்ளான்,
சிவில் உடையில் இருந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் இளைஞனை பைக்கோடு தூக்கி பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினை புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரம் மல்லிகைத் தீவில் வசிக்கும் 23 அகவையுடைய இளைஞனே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
எனவே மக்கள் விழிப்புடன் செயற்படுங்கள் உங்களை ஏமாற்றுவதற்கு பல வழிகளில் ஏமாற்றிகள் வருவார்கள் ஏமாந்து விடாதீர்கள்