6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி கட்டாயம்!! -ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு-

ஆசிரியர் - Editor II
6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி கட்டாயம்!! -ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு-

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்திக்கொள்ளும் நடைமுறை நீண்ட காலத்திற்கு தொடரும் என்று ஆஸ்திரேலியாவின் தேசிய மருந்தக அமைப்பு நிறுவனத்தின் தலைவர் டிரெண்ட் ட்வாமேதெரிவித்துள்ளார்.

இதே போன்று பாதுகாப்பு முகக்கவசம் அணியும் நடைமுறையும் மிக நீண்ட காலத்திற்கு தொடரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

கொரோனா தொற்று நம்மிடையே பல வருடங்கள் இருக்கும். சாதாரண காய்ச்சல் மற்றும் சளிக்கு எடுத்துக் கொள்ளும் தடுப்பூசிகளை போன்றே கொரோனா தடுப்பூசியையும் கருத வேண்டும்.

வருங்காலத்தில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை ஆண்டுக்கு ஒருமுறையா அல்லது இருமுறை போட வேண்டுமா என்பதை கொரோனா வைரஸ் குறித்த தரவுகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வருவார்கள்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு