அரச காணி பிடித்துக் கொடுக்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டவருக்கு நடந்த கதி! பிரதேச செயலகத்திற்குள் காத்திருந்த பொறி..
அரச காணி ஒன்றை பிடித்துக் கொடுக்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட லஞ்ச பெருச்சாளியை லஞ்ச ஊழில் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை (22) கைது இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த உத்தியோகத்தரை
எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
ஆரையம்பதியைச் சேர்ந்த குறித்த உத்தியோகத்தர் நீண்ட காலமாக காணிபத்திரம் தொடர்பாக ஆசிரியர்கள் உட்பட பலரிடம் இலஞ்சம் வாங்கி வந்துள்ளதாகவும்.
இந்த நிலையில் ஒருவருக்கு அரச காணி ஒன்றை பெற்றுதருவதாக ஒருவரிடம் 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம் முறையிட்டதையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய
சம்பவதினமான நேற் பகல் செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் வைத்து அவர் கேட்ட 2 இலட்சம் ரூபாவை லஞ்சாமாக கொடுத்தபோது
அங்கு இருந்த லஞ்ச உழல் ஒழிப்பு பிரிவினர் குறித்த உத்தியோகத்தரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது
அவரை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.