டொலர் நெருக்கடி - தூதரகங்களை மூடுகிறது இலங்கை!

ஆசிரியர் - Admin
டொலர் நெருக்கடி - தூதரகங்களை மூடுகிறது இலங்கை!

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக செலவுகளைக் குறைக்கும் நோக்கில் வெளிநாடுகள் சிலவற்றிலுள்ள தூதரகம் மற்றும் கொன்சியூலர் அலுவலகங்களை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருக்கின்றது.

 நாடு தற்போது முகங்கொடுத்திருக்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு ஏற்கனவே அனைத்து அமைச்சுக்களிடமும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தார்.

 இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே நைஜீரியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தையும் ஜேர்மனியின் பிரான்ஸ்பேர்ட் நகரிலுள்ள இலங்கையின் கொன்சியூலர் அலுவலகத்தையும் சைப்பிரஸிலுள்ள இலங்கையின் கொன்சியூலர் அலுவலகத்தையும் மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

 அதற்கமைய ஜேர்மனியின் பிரான்க்பேர்ற் நகரிலுள்ள கொன்சியூலர் அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணியாளர்களின் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது.  பேர்லின் நகரிலேயே ஜேர்மனிக்கான இலங்கைத் தூதரகம் அமைந்துள்ளது.  அதுமாத்திரமன்றி அதேபோன்று நைஜீரியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல முடியாமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 அனைத்து அமைச்சுக்களும் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், அதன் ஓரங்கமாகவே வெளிவிவகார அமைச்சினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு