நாடாளுமன்றத்தில் எதையும் வாந்தி எடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர் – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்துக்கு அமைச்சர் டக்ளஸ் சாடல்!

ஆசிரியர் - Admin
நாடாளுமன்றத்தில் எதையும் வாந்தி எடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர் – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்துக்கு அமைச்சர் டக்ளஸ் சாடல்!

நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி எதையும் வாந்தி எடுக்க முடியும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குருநகர் இழுவலை மீன்பிடிப் படகு உரிமையாளர்களிடம் கப்பம் அறவிப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சபையில் தெரிவித்த கருத்தினை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட கடற்றொழில் அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விவாத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்தா கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முண்டு கொடுக்கப்பட்ட கடந்த ஆட்சிக் காலத்தில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில்; இழுவை வலைத் தொழில் தடை சட்டம் மற்றும் வெளிநாட்டு படகுகள் தொடர்பான சட்டம் போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், இழுவை வலைத் தடைச்சட்டத்தினை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அவை அமுல்ப்படுத்தப்படவில்லை எனவும், நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளுர் இழுவை வலைப் படகுகள் தொழிலில் ஈடபடுவதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், உள்ளுர் இழுவை வலைத் படகு ஒன்றுக்கு 5000  ரூபாய் வீதம் கடற்றொழில் அமைச்சருக்கு வழங்கப்படுவதனாலேயே அவை தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு தன்னுடைய கண்டனத்தினையும் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி குறித்;த கருத்தை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், முடியுமானால் பொது வெளியில் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவிக்குமாறும் சவால் விடுத்தார்.

அத்துடன், கடற்றொழில் அமைச்சரின் ஊடக செயலாளர் நெல்சன் எதிரிசிங்க தொடர்பாக அண்மையில் சில ஊடகங்களில் வெளியாகிய செய்தியினை முழுமையாக மறுத்துள்ள கடற்றொழில் அமைச்சர், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய ஊடகச் செயலாளராக பணியாற்றி வருகின்ற நெல்சன் எதிரிசிங்க, பணி நிமிர்த்தம் நாடளாவிய ரீதியில் பயணிப்பதாகவும், அந்தவகையில் அண்மையில் முல்லைத்தீவிற்கு சென்றிருந்ததாகவும் தெரிவித்ததுடன், சட்டவிரோதச் செயற்பாடுகள் எதிலும் அவர் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் கடற்றொழில் சார்ந்து முன்வைக்கப்பட்டிருந்த 16 இலக்குகளை செயற்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதற்கு அமைவாக, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் செப்ரெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் மொத்தம் 321,575 மெற்றிக் தொன் மீனின அறுவடையினை எட்டியுள்ளதாகவும் தெரிவித்ததுடன், கடந்த வருடத்தில் கடற்றொழில் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் மற்றும் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் தொடர்பாகவும் தெளிவாக எடுத்துரைத்ததுடன் அடுத்த வருடத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு