4 மாத காதலியை கடத்த 7 பேருடன் வந்த காதலன்..! ஒருவர் பலி, காதலி உட்பட இருவர் காயம், காதலன் உட்பட 6 பேர் தலைமைறைவு! நடந்தது இதுதானாம்..

ஆசிரியர் - Editor I
4 மாத காதலியை கடத்த 7 பேருடன் வந்த காதலன்..! ஒருவர் பலி, காதலி உட்பட இருவர் காயம், காதலன் உட்பட 6 பேர் தலைமைறைவு! நடந்தது இதுதானாம்..

கிளிநொச்சி - வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் டிப்பர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 17வயதான ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

இதன்படி ஒட்டுசுட்டான் - மானுருவி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 4 மாதங்களாக புளியம்பொக்கணை பகுதியை சேர்ந்த 23 வயதான பெண்ணை காதலித்து வந்திருக்கின்றார். 

இந்நிலையில் நேற்றய தினம் மாலை காதலியை வீட்டிலிருந்து கடத்திச் செல்வதற்காக 7 பேருடன் டிப்பர் வாகனத்தில் வந்து பெண்ணை கடத்திக்கொண்டு ஓடுகையில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் புளியம்பொக்கணை பகுதியை சேர்ந்த 17 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், கடத்தப்பட்ட காதலி உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காதலன் உட்பட 6 பேர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளனர். 

அவர்களை கைது செய்ய பொலிஸார் துரித நடவடிக்கை எடுத்துள்ளதுடன் தப்பி ஓடியவர்கள் ஏற்கனவே குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்தவர்களா? என்ற கோணத்திலும் விசாரணைகளை நடத்துவதாக கூறப்படுகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு