SuperTopAds

வீதி விபத்துக்களை தடுக்க யாழ்.சுன்னாகம் பொலிஸார் சிறப்பு நடவடிக்கை..!

ஆசிரியர் - Editor I
வீதி விபத்துக்களை தடுக்க யாழ்.சுன்னாகம் பொலிஸார் சிறப்பு நடவடிக்கை..!

வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் சுன்னாகம் பொலிஸாரினால் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் பின்புற எச்சரிக்கை விளக்குகள் இல்லாத வாகனங்களை அடையாளப்படுத்தும் ஒளித்தெறிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது

வீதி விபத்துக்களை குறைப்பதற்காக "உங்களின் பாதுகாப்பிற்காக நாம்" எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை யாழ்ப்பாண  மாவட்டத்திலுள்ள பல இடங்களில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கே.கே.எஸ் பிரதான வீதியிலுள்ள சுன்னாகம் சந்தியில் வைத்து வீதியினால் சென்ற துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட பொலீஸ் நிலையங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலீஸ் அத்தியச்சகரின் ஆலோசனைக்கமைவாக, மாவட்ட பொலீஸ் போக்குவரத்து பிரிவு மற்றும் சுன்னாகம் பொலீஸ் போக்குவரத்து பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையினை இன்று முன்னெடுத்திருந்தனர்.

இன்று இடம்பெற்ற ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கையில் சுன்னாகம் பொலீஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி உப பொலீஸ் பரிசோதகர் ஈ.எம்.பி.ஏக்கநாயக, யாழ் மாவட்ட போக்குவரத்து பொலீஸ் பிரிவின் உப பொலீஸ் பரிசோதகர் 

பிரியந்த அபேயரத்ன உள்ளிட்ட பொலீஸார் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.