SuperTopAds

நீரை மேட்டுநிலத்திற்கு ஏற்றி அதனூடாக பயிர்ச் செய்கைகளை நவீன தொழிநுட்பத்துடன்!

ஆசிரியர் - Admin
நீரை மேட்டுநிலத்திற்கு ஏற்றி அதனூடாக பயிர்ச் செய்கைகளை நவீன தொழிநுட்பத்துடன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்  உலக வங்கியின் 50 மில்லியன் ரூபா நிதி உதவியில் அமைக்கப்பட்ட  பூவசரங்குளம் ஏற்று நீர்பாசன திட்டத்தினை வடமாகாணஆளுனர் ஜீவன் தியாகராஜா அவர்கள் நேற்று (03)  திறந்து வைத்துள்ளார்.

145 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 145 ஏக்கர் விவசாய நடவடிக்கைக்காக 50 மில்லியன் ரூபா செலவில் பூவரசங்குளத்தில் இருக்கும் நீரை மேட்டுநிலத்திற்கு ஏற்றி அதனூடாக பயிர்ச் செய்கைகளை நவீன தொழிநுட்பத்தினூடாக முன்னெடுக்கும்  செயற்திட்டமாக இது அமைந்துள்ளது.

வவுனிக்குளத்தின் ஒரு வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் 14 கீலோமீற்றர் தூரம் வந்து பூவசரங்குளத்தினை அடைகின்றது.

இந்த நீரின் மூலம் இந்த பகுதி விவசாயிகளின் நன்மை கருதி விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் இந்த ஏற்று நீர்ப்பாசன திட்டம்  அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்ப்பம்பிகள் ஊடாக நீர் வழங்கப்பட்டு தூவல் நீர்ப்பாசனங்களை பயன்படுத்தி பயிர்ச் செய்கை விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகள் ஊக்குவிக்கப்படவுள்ளனர்.  

தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும்  உற்பத்தி செலவு அதிகரிப்பு.சந்தைப்படுத்தல் பிரச்சினையினை எதிர்கொண்டுவரும் விவசாயிகளின் குறித்த இரண்டு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.