வடக்கில் பாடசாலை மாணவர்கள் 12 பேருக்கும் பெற்றோர் 3 பேருக்கும் கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
வடக்கில் பாடசாலை மாணவர்கள் 12 பேருக்கும் பெற்றோர் 3 பேருக்கும் கொரோனா தொற்று..!

தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 12 பேர் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.வினோதன் கூறியுள்ளார். 

தலைமன்னார் வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளடங்களாக 50 பேருக்கு பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.இதன் போது தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 12 பேருக்கும் 

பெற்றோர்கள் 3 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர் ஒருவருக்கு தலைமன்னார் வைத்தியசாலையில் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 

குறித்த மாணவருடன் தொடர்புடைய மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே பாடசாலை மாணவர்கள் உள்ளடங்களாக 15 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் குறித்த மாணவர்களுடன் தொடர்புடைய மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Radio