மாத்தளை மாநகரசபை முதல்வர் மற்றும் 20 உறுப்பினர்கள் யாழ்.மாநகரசபைக்கு விஜயம்..

ஆசிரியர் - Editor I
மாத்தளை மாநகரசபை முதல்வர் மற்றும் 20 உறுப்பினர்கள் யாழ்.மாநகரசபைக்கு விஜயம்..

மாத்தளை மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஸ் தலைமையிலான சபை உறுப்பினர்கள் யாழ்.மாநகரசபைக்கு விஜயம் செய்து பிரதான நூலகம், கலாச்சார மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டனர். 

யாழ்.மாநகர சபையின் செயல்பாடுகள் தொடர்பில் நேரில் பார்வையிட்டு  அறிந்துகொள்ளும் வகையில் மாத்தளை மாநகர சபை முதல்வரும் உறுப்பினரகளும் வருகை தந்துள்ளனர். 

இவ்வாறு வருகை தந்த மாத்தளை மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் நேற்று பிரதான நூலகம மற்றும் காலாச்சார மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டதோடு தற்போது புதிதாக அமைக்கப்படும் நகர மண்டபத்தினையும் பார்வையிட்டனர். 

இதன்போது வருகை மாத்தளை உறுப்பினர்களை மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் அழைத்துச் சென்று காண்பித்தனர்.

Radio