SuperTopAds

வடமாகாணத்தில் மேலும் ஒரு மிகப்பெரும் காணி அபகரிப்புக்கு மகாவலி அதிகாரசபை திட்டம்! சுமார் 1900 ஏக்கர் தமிழர்களின் விவசாய நிலம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் மேலும் ஒரு மிகப்பெரும் காணி அபகரிப்புக்கு மகாவலி அதிகாரசபை திட்டம்! சுமார் 1900 ஏக்கர் தமிழர்களின் விவசாய நிலம்..

முல்லைத்தீவு - சூரியனாறு பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 1900 ஏக்கர் அளவுள்ள விவசாய காணிகளை மகாவலித் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்காக சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் சூரியன் ஆற்றுப்பகுதியில் தலா 10 ஏக்கர்கள் வீதம் 190 குடும்பங்களுக்கு 1900ஏக்கர்கள் விவசாயக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அதற்கான காணிப் பெமிற்றுக்களும் வழங்கப்பட்டுள்ளது.

போரின் பின்னரான சூழலில் உருவாக்கப்பட்ட வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டதாக ‘கலம்பவெவ என்றொரு கிராமம் உருக்கப்பட்டது. இந்தக் கிரமத்தினை உருவாக்குவதற்காக 

சூரியன் ஆற்றுப் பகுதியில் உள்ள விவசாயக் காணிகளுக்கு அடுத்துள்ள தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியே சுவீகரிக்கப்பட்டு பெயமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், குறித்த ‘கலம்பவெவ’ கிராமத்திற்கு அடுத்ததாகவுள்ள 

எஞ்சியுள்ள சூரியன்ஆற்றுப் பகுதி விவசாயக்காணிகளையும் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகாவலி திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கான நிலப்பரப்பினை வழங்க வேண்டி உள்ளதால் 

இந்தப் பகுதி அவசியமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு அதற்காக ஏற்கனவே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இப்பகுதிக்கான காணிப் பெமிற்றுக்களை இரத்துச் செய்யுமாறு கடிதம் மூலம் கோரப்பட்டுள்ளது.

அக்கோரிக்கை கடிதத்தினை முல்லைத்தீவு மாவட்டத்தினை தளமாக கொண்டு செயற்படும் மகாவலி வதிவிடத் திட்ட முகாமையாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முன்னதாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆமையன் குளம், மற்றும் முந்திரிகைக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள 850ஏக்கர்கள் நீர்பாசன நடவடிக்கைகளுக்கு தேவையாக உள்ளதெனக் கூறி சுவீகரிக்கப்பட்டது.

பின்னர் ஆமையன்குளத்திற்கு கிரிபென்வெவ என்றும் முந்திரிகைக் குளத்திற்கு நெலும்வெவ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நீர்ப்பாசனத் திட்டத்திற்கு பதிலாக சிங்களக் குடியேற்றங்களே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அச்சமயத்தில் தமிழ்த் தரப்பில் எதிர்ப்புக்கள் வெளியிட்ட போதும் பொதுமக்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்பின்னர் சூரியன் ஆற்றுப்பகுதியின் ஒருபகுதி கையகப்படுத்தப்பட்டு 

அதற்கு கலம்பவெவ என் பெயர் சூட்டப்பட்டு கிரமமாக மாற்றியமைக்கப்பட்டது. நாளடைவில் அப்பகுதி வெலிஓயா பிரதேச செயலாளர் நிர்வாகத்தினுள் உள்ளீர்க்கப்பட்டு குடியேற்றங்களும் செய்யப்பட்டது.

தற்போது, சூரியன் ஆற்றின் எஞ்சிய விவசாயக் காணிகளையும் சுவீகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப்பகுதியும் சுவீகரிக்கப்படும் பட்சத்தில் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு 

தமிழ் மக்களின் வாழும் மற்றும் வாழ்வாதர நிலங்கள் நோக்கி மேலும் விஸ்தரிக்கப்படும் பேராபத்தான நிலைமை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.