யாழ்.மாவட்டத்தில் அதிகளவு இராணுவம் வீதிகளில் இறக்கப்பட்டிருப்பது ஏன்..? கட்டளை தளபதி வழங்கியுள்ள விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அதிகளவு இராணுவம் வீதிகளில் இறக்கப்பட்டிருப்பது ஏன்..? கட்டளை தளபதி வழங்கியுள்ள விளக்கம்..

பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே யாழ்.மாவட்டத்தில் படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்க கூறியுள்ளார். 

இன்று யாழ்.புத்தூர் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வீட்டினை கையளிக்கும் நிகழ்வில் ஊடகவியலாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது.

ஏன் என வினவியதற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றைய மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.நகரில் ராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது. 

எனினும் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது ராணுவத்தின் கடமையாகும். அதனை இராணுவத்தினராகிய நாங்கள் மேற்கொண்டுள்ளோம். 

எந்த சூழ்நிலையிலும் நாட்டினுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு ராணுவத்தினர் ஆகிய நாங்கள் முன்னின்று செயற்படுவோம்.

அதனடிப்படையில் தற்போது பொலிஸாருக்கு உதவும் முகமாகவே ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு சட்டம் ஒழுங்கினை பொலிசார் நிலைநிறுத்துவதற்கு செயற்படுகிறார்கள்.

அவர்களுக்கு ராணுவத்தினரின் ஒத்துழைப்பு தேவைப்படுமிடத்து இராணுவத்தினரும் களமிறக்க படுவார்கள் என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு