தென்னை மட்டையில் முள்க்கம்பியை சுற்றி அதனால் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய இராணுவம்..!

ஆசிரியர் - Editor I
தென்னை மட்டையில் முள்க்கம்பியை சுற்றி அதனால் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய இராணுவம்..!

பெயர் பலகைகை புகைப்படம் எடுத்ததற்காக முல்லைத்தீவில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றது. 

சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் எனும் ஊடகவியலாளர் மீதே இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்த போது , அங்கிருந்த இராணுவத்தினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

 அவர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தியதுடன் , தான் இராணுவ முகாமையோ , இராணுவத்தினரையோ புகைப்படம் எடுக்கவில்லை. 

என கூறிய போதிலும் இராணுவத்தினர் அவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக தென்னை மட்டையில் முள்கம்பி 

சுற்றி அதனால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவதுடன். சம்பவம் இடத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் 

முள்கம்பி சுற்றப்பட்ட தென்னை மட்டையை மீட்டுள்ளனர். 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio