யாழ்.காரைநகர் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியைவிட்டு விலகி விபத்து..!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியைவிட்டு விலகி விபத்து..!

யாழ்.காரைநகர் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீதிப் புனரமைப்பு வேலையின்போது வீதியின் இருமருங்கிலும் ஆழமான குழிகள் தோண்டப்பட்டதாலும் 

சாரதியின் கவனக்குறைவு காரணமாகவும் குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் இ.போ.சபையின் காரைநகர் சாலை முகாமையாளரை கேட்டபோது,

குறித்த பாதையினூடாக யாழ்.நோக்கி சேவையில் ஈடுபட்டது.முன்னால் சந்திரா தனியார் பேருந்து வீதியில் காணப்பட்ட குளிர் காரணமாக சரியாக பிடித்து 

அதன் காரணமாக பின்னால் சென்று கொண்டிருந்த போக்குவரத்து சபை பஸ் வண்டி திடீரென பிரேக் பிடித்தால் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் 

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

Radio