யாழ்.பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் 14 பேர் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தலில்! சபையிலிருந்த உத்தியோகஸ்தர்கள் மூவருக்கு தனிமைப்படுத்தல் இல்லையா?

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள் 14 பேர் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தலில்! சபையிலிருந்த உத்தியோகஸ்தர்கள் மூவருக்கு தனிமைப்படுத்தல் இல்லையா?

யாழ்.பருத்தித்துறை நகரசபை 2022ஆம் ஆண்டுக்கான வாழவிடு நிறைவேற்று சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த நகரசபை உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நகரசபை உறுப்பினர்கள் 14 பேர் உட்பட 15 பெயர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

நேற்றைய தினம் பாதீடு நிறைவேற்றப்பட்ட நிலையில் சபையில் இருந்த உறுப்பினர் ஒருவர் சுகயீனம் அடைந்திருந்தார் இதனை அடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த 14 உறுப்பினர்கள் மற்றும் சாரதி ஒருவர் உட்பட 15 பேர் சுகாதார பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

எனினும் சபை அமர்வில் இருந்த நகரசபை உத்தியோகஸ்தர்கள் மூவர் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Radio