யாழ்.மாவட்ட மக்கள் டெங்கு காய்ச்சல் தொடர்பில் விழிப்புடன் இருங்கள்! 21 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்கள் டெங்கு காய்ச்சல் தொடர்பில் விழிப்புடன் இருங்கள்! 21 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..

யாழ்.மாவட்டத்தில் 3 வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியர் சி.யமுனானந்தா கூறியுள்ளார். 

யாழ்ப்பாணம், நல்லுார், கோப்பாய், சண்டிலிப்பாய், வேலணை, தெல்லிப்பழை, பளை போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே தற்போதுள்ள மழையுடனான காலநிலையில் டெங்கு தொற்ற பரவாமல் இருப்பதற்கு சூழலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம், 

நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதாலும், வீதிகளில் கழிவுகளை பொறுப்பற்ற விதத்தில் வீசாதிருப்பதாலும் டெங்கு தொற்றிலிருந்து எம்மையும் சமூகத்தையும் பாதுகாக்கலாம் என கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு