யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 183 குடும்பங்கள் பாதிப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 183 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களை சேர்ந்த 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொிவித்திருக்கின்றது. 

தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று மாலை நான்கு மணிவரையான நிலவரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்நேற்று முதல் பெய்தமழை மற்றும் அதிக காற்று காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் காரைநகரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 

இரண்டு குடும்பத்தினர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.

Radio