வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா எங்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கிறார் இல்லை! நாடாளுமன்றில் பிரதமரிடம் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா எங்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கிறார் இல்லை! நாடாளுமன்றில் பிரதமரிடம் முறைப்பாடு..

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்பையே எடுப்பதில்லை. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு முறையிட்ட அவர் மேலும் கூறுகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் சில பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் பேசுவதற்காக பல தடவைகள் தொலைபேசியில் முயற்சசித்தேன். 

ஆனால், அவர் எனது அழைப்புக்களுக்குப் பதிலளிக்கவில்லை.வடமாகாணத்தின் ஆளுநர்களாக இருந்த திருமதி சார்ள்ஸ் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் நாம் எந்தவேளையில் தொலைபேசி அழைப்பு எடுத்தாலும் உடனடியாகப் பதில் வழங்குவார்கள். 

ஆனால், ஜீவன் தியாகராஜா எமது தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதிலளிப்பதில்லை என்பதை இங்குள்ள பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன் என்றார்.

Radio