கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் சிறுமியை கட்டிவைத்தவர் கைது..! யாழ்.கொடிகாமம் - வறணியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் சிறுமியை கட்டிவைத்தவர் கைது..! யாழ்.கொடிகாமம் - வறணியில் சம்பவம்..

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக 6 வயது சிறுமியை கட்டிவைத்ததாக சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட நிலையில் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் கொடிகாமம் - வறணி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. கொடுக்கல் வாங்கல் காரணமாக அயல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பிடித்து கட்டிவைத்து கொடுக்கல் வாங்கல் கணக்கை தீர்ப்பதற்கு முயற்சித்துள்ளார். 

இந்த விடயம் சிறுமியின் பெற்றோருக்கு தொியவந்த நிலையில் பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சந்தேகநபரை 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது. 

Radio